மளிகை கடைக்குள் புகுந்த கார்.. துடி துடித்து உயிரிழந்த பெண்..!
கரூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி அருகில் இருந்த கடைக்குள் நுழைந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கரூரில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மளிகை கடைக்குள் புகுந்தது. காரின் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





