நிற்காமல் சென்ற ராகுல் காந்தி.. பூக்களுடன் காத்திருந்த சிறுவர்கள் ஏமாற்றம்..!
நீலகிரியில் ராகுல் காந்தியை காண்பதற்கு நீண்ட நேரமாக காத்திருந்த சிறுவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கூடலூர் வழியாக கேரளாவிற்கு மாலை 4:30 மணி அளவில் ராகுல் காந்தி செல்வதை அறிந்த சிறுவர்கள் அவரை சந்தித்து பூக்கள் வழங்குவதற்காக காத்திருந்தனர்.
ஆனால் ராகுல் காந்தியின் வாகனம் நிற்காமல் சென்ற காரணத்தால் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். வயநாடு நிகழ்ச்சியில் பங்கேற்க நேரம் ஆகிவிட்டதன் காரணமாக அவரது கார் நிறுத்தப்படவில்லை என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





