--- --:--:-- --

மணிப்பூரில் மேலும் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..!

7

மணிப்பூர் வன்முறையின் பொழுது தப்பி ஓடிய மேலும் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாலியல் வன்கொடுமையில் வீடுகள் சூறை தீவைத்த சம்பவங்கள் அரங்கேறின. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

 

அதில் பலர் அண்டை மாநிலங்களுக்கு தப்பி சென்றனர். மணிப்பூர் வன்முறை தொடர்பாக 6000 மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வன்முறையின் கோர முகமும் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

அந்த வகையில் வன்முறையின் பொழுது இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் மணிப்பூர் வன்முறையின் பொழுது தப்பிய மேலும் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon