காய்ச்சலுக்கு மெடிக்கலில் போட்ட ஊசி.. கை, கால் இழுத்து கொண்டதால் பரபரப்பு..!
சிதம்பரம் அருகே காய்ச்சலுக்காக மருந்து கடையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். 23 வயதான தனசேகர் கொத்தனார் வேலை செய்து வந்தார். காய்ச்சலுக்காக கொத்தட்டையில் உள்ள மருந்து கடையில் நான்காம் தேதி மருந்து மாத்திரை வாங்கியதாக தெரிகிறது.
அப்போது மருந்து கடைக்காரர் தனசேகருக்கு இரண்டு ஊசிகள் போட்டதாகவும் காய்ச்சல் சரியாகாததால் மறுநாளில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்பொழுது தனசேகரன் உடல்நிலை மோசமடைந்து கை, கால்கள் இழுத்துக் கொண்டதால் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அளிக்க சென்றனர்.
அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மருந்தகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான மருந்து கடை உரிமையாளர் ரமணனை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





