ராபிடோவில் புக் செய்த பெண்.. டிரைவர் செய்த அட்டூழியம்..!
பெங்களூருவில் பயணத்தின் பொழுது பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ராபிடோ பைக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். டவுன்ஹாலில் நடைபெற்ற மணிப்பூர் விவகார ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
பின்னர் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீட்டிற்கு திரும்புவதற்காக ரேபிடோ பைக் டேக்சியை இரவில் புக் செய்துள்ளார். பைக்கில் அழைத்து சென்ற ஓட்டுனர் சிவப்பா என்று இளைஞர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றதும் அந்த இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதோடு பாலியல் தொந்தரவும் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் பணம் செலுத்திய மொபைல் எண்ணுக்கு அன்று இரவே ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாகவும் தெரிகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிவப்பாவை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





