2 மாத குழந்தையை அரசிடம் ஒப்படைத்த தாய்.. பின்னணி என்ன..?
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பெற்றோர் வறுமை காரணமாக தனது இரண்டு மாத பெண் குழந்தையை அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
அந்த கூலி தொழிலாளி தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு இதய நோயும், சிறுநீரக கோளாறும் இருப்பதால் சிகிச்சை அளிக்க பல லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதனால் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததாலும் குடும்ப வறுமையின் காரணமாகவும் அந்த குழந்தையை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைத்தனர். அந்த குழந்தையை மதுரையை சேர்ந்த தத்து நிறுவனத்தினர் பெற்றுச் சென்றுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





