உணவுக்காக வீடுகளின் கதவை உடைக்கும் யானைகள்.. அச்சத்தில் மக்கள்..!
கோவை அருகே மருதமலையில் உணவு தேடிவரும் யானைகள் வீடுகளின் கதவை உடைப்பதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். மருதமலை அடிவார பகுதியில் உள்ள லத்தேசி பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நான்கு யானைகள் வந்துள்ளன.
அப்பொழுது அங்கிருந்த வீடுகளின் கதவை யானைகள் உடைத்த பொழுது அருகில் இருந்தவர்கள் யானையை விரட்டினார். கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளுக்குள் புகுந்து அரிசி, சர்க்கரை கோதுமையை தின்று வந்த லாரிகள் யானைகள் தற்போது வீடுகளுக்குள்ளும் புகுந்து மக்களை அச்சத்தில் உள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





