--- --:--:-- --

ககன்யான் திட்டம் – 2 வெப்ப சோதனை வெற்றி..!

1

கன்யான் திட்டத்தின் உந்துவிசை அமைப்பின் இரண்டு வெப்ப சோதனைகள் வெற்றிகரமாக நடந்து முடிக்கப்பட்டன. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்த ஆண்டு இறுதியில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

 

இதற்காக பெங்களூரு மற்றும் திருவனந்தபுரத்தில் ஏற்கனவே என்ஜின் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்பொழுது நெல்லை மாவட்ட மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் இரண்டு வெப்ப சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

 

மேலும் 3 வெப்ப சோதனைகளை நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த சோதனையில் திசை அமைப்பின் செயல் திறனை சரி பார்த்து தயார் நிலையை உறுதி செய்யும் என கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon