--- --:--:-- --

பள்ளி குழந்தைகளை வீட்டு வேலை செய்ய வைத்த தலைமையாசிரியர்..!

9

திருப்பத்தூர் அருகே பள்ளி கழிவறையை தூய்மைப்படுத்த மாணவிகளை பயன்படுத்திய தலைமை ஆசிரியரை மாற்ற கோரி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதித்தனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கலையரசி பணியாற்றி வருகிறார். மேலும் இந்த பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 

இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலையரசி பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனது சொந்த வேலைகளையும் பள்ளியில் கழிவறைகளையும் சுத்தம் செய்ய சொல்வதாக கூறப்படுகிறது.

 

இதன் காரணமாக இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கலையரசியை மாற்றக் கோரி மாணவ, மாணவிகள் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon