போதையில் அசுர வேகத்தில் காரை ஒட்டி பயங்கர விபத்து..!
ஹைதராபாத்தில் மது போதையில் காரை ஒட்டி வந்த பெண் ஏற்படுத்திய விபத்தில் மாநகராட்சி ஊழியர் படுகாயமடைந்தார். மாநகராட்சியில் மதுபோதையில் சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்த பெண் சாலையோரம் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மாநகராட்சி ஊழியர் மீது பலமாக மோதியதில் ஊழியரின் வண்டி சிறிது தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டது.
அதன் காரை ஓட்டி வந்த பெண்ணுடன் மேலும் இரண்டு பெண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. கார் அதிவேகமாக வருவதை கண்ட நபர் அப்படியே தனது இருசக்கர வாகனத்தையும் நிறுத்திய பொழுதும் விபத்து நிகழ்ந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





