ட்ரிபிள்ஸ் போன பெண்களின் அட்டூழியம்..!
சென்னை அடையாறில் இருசக்கர வாகனத்தில் மூன்று பெண்கள் சென்றதை வீடியோ எடுத்த நபரை பெண்கள் காவலர் முன்பே தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடையார் எம் ஜி ஆர் சாலையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி வாகன சோதனை மேற்கொண்டு இருந்தார். அப்போது சாய் வந்து கொண்டிருந்த மூன்று பெண்கள் ஒரே வாகனத்தில் பயணித்தனர்.
இதனை மடக்கி பிடிக்க போக்குவரத்து காவல்துறை அதிகாரி விளக்கம் கேட்ட பொழுது உடல்நிலை சரியில்லை எனக் கூறி அங்கிருந்து வேகவேகமாக தனது ஆண் நண்பருடன் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றனர்.
அப்பொழுது டீக்கடையில் நின்று கொண்டிருந்த அருண்குமார் என்பவர் அந்த பெண்கள் செல்வதை செல்போனில் பதிவு செய்தார். அப்பொழுது அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செருப்பை கழற்றி அடிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் போக்குவரத்து காவலர் பெண்களை அங்கிருந்து கிளம்பும்படி எச்சரித்தார். பின்னர் பெண்களில் இருவர் பைக் வேண்டாம் என நடக்க தொடங்கினர். அப்பொழுது செய்தி சேகரித்துக் கொண்டிருந்தவரை தாக்க முயன்றனர். இந்த வீடியோ வெளியானதால் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





