தொண்டையில் சிக்கிய மீன் முள்.. எக்ஸ்ரேவில் இருந்த சில்வர் ஸ்பூன்..!
சிறுவர்கள் எதையாவது வாயில் போட்டு விழுங்கி கஷ்டப்படுவார்கள். ஆனால் மருத்துவர்கள் சில பெரியவர்களும் இப்படி இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள் என்கின்றனர். மருத்துவர்கள் சொல்வதற்கு ஏற்றார் போல சம்பவம் ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளது.
பெயர் குறிப்பிடாத ஒருவர் மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் குத்தியதால் அதை அகற்ற ஐந்து அங்கல ஸ்டீல் ஸ்பூனை பயன்படுத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்பொழுது எதிர்பாராத விதமாக ஸ்பூனை விழுங்கிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
விழுங்கப்பட்டு நான்கு நாட்களாகியும் எந்தவிதமான வலியும், அசௌகரியமும் அவருக்கு தெரியவில்லையாம். இதனால் அதனை அந்த நபர் அலட்சியமாக விட்டுவிட்டார் எனவும் கூறப்படுகிறது. நான்கு நாட்களுக்குப் பிறகு இவர் மருத்துவரை சந்தித்துள்ளார்.
மருத்துவர் அவருக்கு எக்ஸ்ரே எண்டோஸ்கோபி போன்ற முறைகளை பயன்படுத்தி ஸ்பூனின் நிலையை கண்டறிந்துள்ளனர். சிறுகுடலின் சிக்கியுள்ள அந்த ஸ்பூனையை அகற்ற டாக்டர்கள் படாத பாடுபட்டதாக சொல்லப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





