மம்தா பானர்ஜிக்கு அறுவை சிகிச்சை..!
மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இடது காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மம்தா முழங்கால் தசைநார் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருந்த நிலையில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை கல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
அறுவை சிகிச்சை முடிந்ததும் மம்தா பானர்ஜி வீடு திரும்பினார் என்றும் சில நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கிய பொழுது வேகமாக குறுகியதும் மம்தாவின் முழங்கால் பிரச்சனை தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





