--- --:--:-- --

2 கல்லூரி மாணவர்களிடையே மோதல்.. ரயிலின் கண்ணாடி, ஜன்னல் உடைந்து நாசம்..!

6

சென்னை அருகே விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

 

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் மின்சார ரயிலில் மாநிலக் கல்லூரியில் படிக்கும் மாணவர் சர்வேஸ்வரன் தனது மனைவியுடன் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த சர்வேஸ்வரன் நண்பர்களுடன் சேர்ந்து விம்கோ நகர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்த போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருந்த ரயில் பெட்டி மீது கத்தி, கருக்கல் மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

 

அப்போது ரயிலில் இருந்த மாணவர்களும் எதிர் தாக்குதல் நடத்தியதில் ரயில், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon