யானை முன் செல்பி எடுத்த 2 பேருக்கு 10 ஆயிரம் அபராதம்..!
ஈரோட்டில் யானை அருகே சென்று செல்பி எடுத்த இரண்டு பேருக்கு வனத்துறை அதிகாரிகள் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த இருவர் காரை விட்டு இறங்கி யானையை நெருங்கி என்று செல்பி எடுத்துள்ளனர்.
இந்த காட்சிகளை மற்றொரு வாகனத்தில் பயணித்தவர்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் வனத்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டு தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரசாத் என்பவருக்கும் 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





