--- --:--:-- --

எழும்பூர் அரசு மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய ஊழியர்..!

9

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த ராஜன் மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் எழும்பூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

வழக்கம்போல் பணிக்கு வந்த ராஜன் திடீரென தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon