நீதிமன்ற சாலையில் செல்போனை பறித்துக் கொண்டு சென்ற திருடர்கள்..!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கொள்ளையர்கள் செல்போனை பறித்து செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
உயர் நீதிமன்ற கட்டிடத்தின் முன்பு பெண் ஒருவர் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்பொழுது பைக்கில் வந்து இருவர் அந்த பெண்ணின் செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.
இதில் கீழே விழுந்த அந்த பெண்ணிற்கு லேசான காயம் ஏற்பட்டது. காவலர்களின் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் திருட்டு சம்பவம் பதிவான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





