--- --:--:-- --

பலத்த பாதுகாப்புடன் கனக சபையில் பக்தர்களை ஏற்றிய அறநிலையத்துறை..!

1

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பை மீறி கனக சபையின் மீது பக்தர்களை ஏற்றும் நடவடிக்கையில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆணி திருமஞ்சனத்தை ஒட்டி கனக சபை மீது ஏறி வழிபட பக்தர்களுக்கு தீட்சிதர்கள் தடைவித்தனர்.

 

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் பக்தர்களை கனக சபை மீது ஏற்றுவதற்காக அறநிலையத்துறை அதிகாரிகளும் வருவாய்துறை அதிகாரிகளும் வந்தனர். இதனை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கோவிலில் குவிக்கப்பட்டனர்.

 

அப்பொழுது கனக சபையில் யாரையும் அனுமதிக்க கூடாது என பாஜகவினர் சிலரும் முழக்கங்களை இட்டனர். சில பக்தர்கள் கனக சபை படிக்கட்டில் அமர்ந்து தங்களை மேடை அனுமதி கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon