பள்ளி மாணவியை மிரட்டி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த தம்பதி..!
தர்மபுரி அருகே பத்தாம் வகுப்பு மாணவியின் ஆடைகளை கழற்ற வைத்து ஆபாச வீடியோ எடுத்ததுடன் 44 கிராம் தங்க நகைகளை மிரட்டி அபகரித்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் அவரது மனைவி தெய்வானை ஆகிய இருவரும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். தெரிந்தவர்கள் என்பதால் அந்த தம்பதியுடன் சென்ற மாணவியை கொலை செய்து விடுவேன் என தமிழ்ச்செல்வன் மிரட்டி ஆடைகளை கழற்ற சொல்லியுள்ளான்.
மாணவி அச்சத்தில் கழற்ற அதனை தமிழ்ச்செல்வன் வீடியோவாக எடுத்துள்ளான். வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி மாணவி அவரது வீட்டில் இருந்த நகைகளை எடுத்து வருமாறு கூற அச்சமடைந்த மாணவி 44 கிராம் நகைகளை தமிழ்ச்செல்வனிடம் எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
வீட்டில் நகை காணாமல் போன பெற்றோருக்கு தெரிய வரவே அதிர்ச்சி அடைந்தவர்கள் மாணவியிடம் விசாரித்த பொழுது நடந்த விவரங்களை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மனைவி தெய்வானையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





