டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆகிறாரா சைலேந்திரபாபு..?
டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற இருக்கும் சைலேந்திரபாபு tnpsc தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பணிகளுக்கான பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்து வருகிறது.
ஏற்கனவே டிஜிபி பதவி வகித்த நடராஜன் ஓய்வுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் இருந்துள்ளார். எனவே டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு tnpsc தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிபி சைலேந்திரபாபு ஒரு 30-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சைலேந்திரபாபு இரண்டு ஆண்டுகளாக தமிழக காவல்துறை தலைவராக உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





