--- --:--:-- --

பொதுக் கூட்டத்தில் திடீரென சரிந்து விழுந்த மேடை..!

8

ஆந்திராவில் பலத்த காற்றினால் தெலுங்கு தேச கட்சியின் பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்தது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் மேலூர் மாவட்டத்தில் தெலுங்கு தேச கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

தெலுங்கு தேச கட்சியின் சார்பில் எதிர்கால உத்தரவாதம் என்ற பெயரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்த பொழுது பலத்த காற்று வீசியது.

 

பலத்த காற்றின் காரணமாக பொதுக்கூட்ட மேடை மொத்தமாக சரிந்து விழுந்தது இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon