பதவி ஆசையால் கோவிலுக்குள் நடந்த கலவரம்..!
புதுச்சேரி மீனவ கிராமத்தில் பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக நடைபெற்ற சமரச கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
வம்பா கீரபாளையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பஞ்சாயத்து நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. சின்னையன் என்பவரின் தலைமையிலான நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்தும் புதிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் பழைய நிர்வாகிகளே செயல்பட்டு வந்தனர்.
இதனால் எதிர்ப்பை தெரிவித்த சௌந்தரராஜன் என்பவரும் அவரது ஆதரவாளர்களும் பிரச்சனை எழுப்பினர். இரு தரப்பினரிடையே சமாதானம் செய்ய புதன்கிழமை அன்று மாரியம்மன் கோயிலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்பொழுது ஏற்பட்ட தகராறில் நாற்காலிகள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





