தயிர் பூரியில் கரப்பான் பூச்சி.. உணவகத்திற்கு நோட்டீஸ்..!
சென்னை பாண்டிபஜார் பகுதி உணவகத்தில் வழங்கப்பட்ட தயிர் பூரியில் கரப்பான் பூச்சி இருந்தது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறையினர் கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கொரட்டூர் பகுதியை சேர்ந்த நித்தியா என்பவர் வாங்கிய தயிர் பூரியில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளனர். மேலும் இதனை சாப்பிட்ட பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் மின்விளக்கு ஒளியில் வரும் பூச்சி தான் அதிலிருந்தது என கூறியுள்ளனர். இருப்பினும் சமையல் அறையை தூய்மையாக பராமரிக்கவில்லை எனக்கூறி உணவகத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





