--- --:--:-- --

நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

13

80, 90 களில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் குஷ்பு. இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

 

இவர் தமிழ் படங்களை தாண்டி கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது குஷ்பு அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

 

இந்நிலையில் குஷ்பு தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் பகிர்ந்துள்ளார். அதில் “எனக்கு மீண்டும் முதுகு எலும்பு பகுதியில் வலி ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்து வருகிறேன். இதில் இருந்து நான் முழுமையாக குணமாகுவேன் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது ரசிகர்கள் குஷ்பு விரைவில் குணமடைய ஆறுதல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon