பிரதமர் மோடியை வரவேற்க வானில் பறக்க விடப்பட்ட 250 அடி நீளமான பேனர்..!
அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடிக்காக 250 அடி நீளம் வரவேற்பு பேனரை வான்வெளியில் பறக்க விட்டு இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு வந்திருக்கும் நிலையில் உள்ள நட்சத்திர விடுதியில் முதலீட்டாளர்கள், பேராசிரியர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் நியூயார்க்கின் ஹட்சன் நதியில் 250 அடி நீள வரவேற்பு பேனரை சிறிய விமானத்தில் கட்டி பறக்கவிட்டு சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





