--- --:--:-- --

காதலன் காதலிக்கு தாலி கட்டுவதற்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற போலீஸ்..!

9

கேரளாவில் முகூர்த்த நேரத்தில் புகுந்து மணப்பெண்ணை போலீசார் இழுத்துச் சென்ற சம்பவத்தில் காதலனுடன் காதலி சேர்ந்து வாழ நீதிமன்றம் அனுமதி அளித்தது.

 

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே ஆலங்குளம் பகுதியில் சேர்ந்த அல்பியா என்ற பெண் திருவனந்தபுரம் அருகே கோவளம் பகுதியைச் சேர்ந்த அகில் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

 

இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய அல்பியா தனது காதலனின் வீட்டிற்கு சென்றாராம். அங்கு ஏற்றுக்கொண்ட அகிலின் பெற்றோர் இருவருக்கும் கோபாலாம் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் நடத்த முடிவு செய்தனர்.

 

அதன்படி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அங்க வந்த போலீசார் திருமணத்தை தடுத்த நிறுத்தி பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றனர். பின்னர் காயங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் சேர்ந்த வாழ அனுமதி அளித்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon