உயிரிழந்தவரின் உடலை துணியில் கட்டி தூக்கி செல்லும் அவலம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் மலைவாழ் கிராமத்தில் முறையான பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை தோனி கட்டி தூக்கி சென்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலைவாழ் பகுதியில் எலந்தம்பட்டு என்ற கிராமம் அமைந்திருக்கிறது.
சாந்தி என்ற பெண் உடல்நலக் குறைவு காரணமாக வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனினும் சில தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் எலந்தம்பட்டு கிராமத்திற்கு செல்ல சாலை வசதிகள் முறையாக இல்லாததால் மலையடிவாரம் வரை ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணின் உடல் கொண்டுவரப்பட்டது. பின் அங்கிருந்து மரக்கட்டகளில் துணியை கட்டி அதில் அவரது உடலை உறவினர்கள் எடுத்து சென்றனர்.
சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் முறையான சாலை வசதி இல்லாமல் உள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X





