பிளஸ் டூ துணைத் தேர்வு.. ஹால் டிக்கெட் வழங்கும் தேதி அறிவிப்பு..!
பிளஸ் டூ துணைத் தேர்வு எழுதும் துணைத்தேர்வர்கள் ஜூன் 14ஆம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் டூ பொது தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8ம் தேதி வெளியானது.
பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி ஜூன் 19ஆம் தேதி மொழிப்பாட தேர்வு தொடங்குகிறது. அதனை தொடர்ந்து ஜூன் 26 ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் பிளஸ் டூ துணைத் தேர்வு எழுதும் தனி தேர்வர்கள் ஜூன் 14ஆம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இணையதளம் மூலம் தனித் தேர்வுகள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





