--- --:--:-- --

தன்னுடன் வேலையை பார்ப்பவர் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சக ஊழியர் செய்த கொடூர செயல்..!

9

புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலையில் சக ஊழியரை கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் புதுச்சேரியில் உள்ள பகுதியில் தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

 

அதே நிறுவனத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த கருணா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் தொழிற்சாலை வளாகத்தில் கொடுக்கப்பட்டிருந்த அறையில் ஒன்றாக தங்கி இருந்தனர். இந்நிலையில் ராம்குமாருக்கும் கருணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 

பின்னர் அவர்களை சக ஊழியர்கள் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் ராம்குமார் உறங்கிக் கொண்டிருந்த பொழுது அவரது தலையில் கட்டையை வைத்து கருணா தாக்கினார்.

 

இதில் படுகாயம் அடைந்த ராம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கருணாவை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon