நடுவானில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு.. அதிர்ச்சி அடைந்த பயணிகள்..!
டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்ற விமானத்தின் இன்ஜின் கோளாறு ஏற்பட்டு ரஷ்யாவில் தரையிறங்கியது. டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி இந்திய விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் விமானத்தில் இன்ஜின் திடீரென பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் ஏர் இந்தியா விமானம் திருப்பிவிடப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமான பயணிகளுக்கு தேவையான வசதி செய்து தரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





