சப்ஸ்கிரைபர்களிடம் மோசடியில் ஈடுபட்ட யூடியூபர்..!
கோவையில் 1,700 ரூபாய் முதலீடு செய்தால் 20 நாட்களில் 1,500 ரூபாய் தருவதாக கூறி விளம்பரம் செய்த யூடியூபர் கைது செய்யப்பட்டனர். கோவையை சேர்ந்த ஹேமலதா மாடர்ன் மாமி என்ற பெயரில் youtube சேனல் நடத்தி வருகிறார்.
அவர் தன்னை பின்தொடர்பவர்களிடம் 1,200 ரூபாய் முதலீடு செய்தால் 20 நாட்களில் 1,500 ரூபாய் தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார். 20 நாளில் 300 ரூபாய் லாபம் கிடைக்கும் என்பதை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர். 20 நாட்களுக்குப் பிறகு உரிய பணம் கிடைக்காததால் ரவி என்பவர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் ஹேமலதா மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 சவரன் நகை, சுமார் 2 கிலோ வெள்ளி, ஏழு செல் ஃபோன்கள், 10 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





