ஒடிசா ரயில்வே விபத்தில் சிக்கிய நபர் 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு..!
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய நபர் 48 மணி நேரத்திற்கு பிறகும் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். பாலசோர் பகுதியில் விபத்து நேர்ந்த பகுதியில் சேதமடைந்த ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து துவங்கியுள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் காவல்துறையினர் சிலர் ரோந்து வந்தனர். அப்பொழுது ஓரமாக போடப்பட்டிருந்த ரயில் பெட்டி கருகி இருந்த புதரில் இருந்து மெல்லிய முனங்கல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து காவலர்கள் ஓடி சென்று பார்த்தபோது ஒருவர் படுகாயங்களுடன் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக அவருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்த பிறகு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் விபத்து நடந்த 48 மணி நேரத்திற்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





