--- --:--:-- --

தந்தையை கம்பியால் அடித்து கொலை செய்த மகன்..!

10

திண்டுக்கல்லில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்ற முதியவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார்.

 

மேலும் பொன் ஸ்ரீனிவாசன் வீட்டில் வீட்டு வாடகை கொடுத்து அந்தோணி தங்கியுள்ளார். இந்த நிலையில் அந்தோணி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம நபர் இரும்பு கம்பியால் அவரது தலையில் தாக்கி விட்டு தப்பி சென்றார்.

 

படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பொழுது கொலையாளி உயிரிழந்த அந்தோணியின் மகனான ஆரோக்கியதாஸ் என தெரியவந்தது.

 

இது தொடர்பான விசாரணையில் தனது மகன் ஆரோக்கியதாஸ் கவனிக்கவில்லை என அந்தோணி நீதிமன்றத்தை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை ஆரோக்கியதாஸ் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon