பெண்ணிற்கு வரன் பார்த்து விட்டு திரும்பிய பொழுது விபத்து..!
கரூரில் பெண்ணுக்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பிய பொழுது எதிரே வந்த வேனில் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்திலிருந்து எட்டு பேரும் பெண்ணுக்கு வரன் பார்ப்பதற்காக கோவை சென்றுள்ளனர்.
பின்னர் காரில் வீடு திரும்பியவர்கள் கரூர் மாவட்டம் பரமத்தி அருகே எதிரே கோழி ஏற்றி வந்த வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த கௌரி கௌதம் இருவரும் சம்பவத்தில் பலியாகினர். மேலும் காரில்இருந்த ஆறு பேரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





