--- --:--:-- --

குளத்தில் பதுங்கிய முதலை.. பிடிக்க நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி..!

1

நாகை மாவட்டம் வேப்பதேவன் காடு பகுதியில் ஒரு மாதமாகியும் முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். புதுக்குளத்தில் கடந்த 20ஆம் தேதி முதலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனையடுத்து தீயணைப்பு மற்றும் வனத் துறையினர் மீன்வலையை பயன்படுத்தி முதலையை பிடிக்க முயற்சித்தனர். இரண்டு மணி நேரம் போராடிய முதலை சிக்காமல் பணி அப்படியே நிறுத்தப்பட்டது.

 

இந்நிலையில் ஒரு வாரமாகியும் முதலையை பிடிக்கும் பணி மீண்டும் தொடங்காததால் பொதுமக்கள் அச்சம் மற்றும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon