--- --:--:-- --

செல்போன் வெடித்ததில் சிறுமி பலி..!

9

கேரளாவில் செல்போன் வெடித்ததில் எட்டு வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பட்டிபுரம் எனும் இடத்தில் அசோக்குமார் என்பவரின் மகள் ஆதித்யஸ்ரீ.

 

இந்த எட்டு வயது சிறுமி நேற்று இரவு 10.30 மணியளவில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென செல்போன் வெடித்து சிதறியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon