--- --:--:-- --

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் திடீர் மாற்றம்..!

10

+2 தேர்வு முடிவுகள் தேதி மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மூன்றாம் தேதி நிறைவடைந்தன. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 

மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் முதலமைச்சரிடம் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும், திட்டமிட்டபடி 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு, தேதி மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon