ஆவின் மோசடி புகார் – ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்காலப் பிணை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்ட இடைக்காலப் பிணையை மேலும் 6 மாதங்களுக்கு உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் கைதான ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிணை வழங்கியிருந்தது. தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யவும் பினைக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கூறி அவர் கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதன் மீதான விசாரணையின் பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை முடிய மேலும் 6 மாதமாகும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை விரைவில் விசாரிக்க அறிவுறுத்திய நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்ட பிணையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





