பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு..!
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மாநில மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
அண்ணா சாலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த ஏழாம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முழக்கங்களை எழுப்பியதாக காங்கிரஸ் மகளிர் அணி மாநில தலைவர் காந்தி, துணை தலைவர் நிஷா ஆகியோர் மீது பாரதிய ஜனதா கட்சி சார்பில் வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்திற்கு வர வைக்கப்பட்டது. இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





