--- --:--:-- --

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்..!

7

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தொலைபேசிக்கு மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுதலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அவரது இல்லம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அவரது தொலைபேசிக்கு ஒரு நபர் அழைத்துள்ளார். 10 கோடி ரூபாய் தரவேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

 

மேலும் பணம் கொடுக்காவிட்டால் தாக்குவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon