ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் பலி..!

திருவண்ணாமலை அருகே ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்தனர். வெங்கடா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஏரி அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றனர்.

 

அப்பொழுது ஆடு ஒன்று ஏரியில் சிக்கிக்கொண்டதால் அதனை காப்பாற்ற இருவரும் தண்ணீரில் இறங்கியுள்ளனர். இருவரும் எதிர்பாராத விதமாக மீன்பிடி வலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

தகவல் அறிந்த போலீசார் இருவரின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.