நாளை காலை முதல் ஆவின் பால் வழங்க மாட்டோம் – பால் உற்பத்தியாளர் சங்க தலைவர்..!
பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் நாசர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. நாளை முதல் பால் வினியோகம் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
குறைந்தபட்சம் லிட்டருக்கு 10 ருபாய் உயர்த்தி தரவேண்டும் என கேட்டோம் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பாலுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே நாளை முதல் பால் வினியோக நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





