--- --:--:-- --

திடீரென பாதித்த நோய்..முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!

5

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடல் புண் நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் முதலமைச்சர் சந்திரசேகரராவ் வயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு அல்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon