சாதி பெயரை சொல்லி மிரட்டிய சித்தப்பா..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில் சாதி பெயரை சொல்லி மிரட்டல் விடுக்கப்படுவதாக கர்ப்பிணி ஒருவர் வளைகாப்பு முடிந்த கையோடு கணவரோட காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.
அந்த பெண்ணும் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் ஐந்தாண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரு வேறு சமூகங்களை சேர்ந்தவர்களாயினும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இருப்பினும் வெங்கடேசனின் சித்தப்பாவான செல்வம் மற்றும் கல்பனாவை ஏற்றுக்கொள்ளாமல் அவ்வப்போது ஜாதி பெயரை சொல்லி வசைப்பாடி வந்தார் என கூறப்படுகிறது.
தனது சித்தப்பாவை கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான கல்பனாவுக்கு அங்குள்ள சமுதாயக்கூடத்தில் வளைகாப்பு நடைபெற்றுள்ளது. வளைகாப்பு முடித்துக் கொண்டு அவர் வீடு திரும்பும் வழியில் செல்வம் பள்ளம் தோண்டி வைத்தார் என கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் தகராறு ஏற்படவே பொறுக்க முடியாத கல்பனா வளைகாப்பு அலங்காரத்துடன் நேராக காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





