காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்த காதலன்..!
நாட்டையே உலுக்கிய ஸ்ரத்தா கொலை வழக்கை போல டெல்லியில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹோட்டல் ஃப்ரீசரில் மறைத்து வைத்திருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் உள்ள பிரீசரில் மறைத்து வைத்திருந்த சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு ஃப்ரீஷரில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹோட்டல் உரிமையாளர் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் ஆனால் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





