ஏழைப் பெண்கள் அரசு பேருந்தில் ஏறக்கூடாது என அசிங்கப்படுத்திய நடத்துனர்..!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே தின கூலிகளாக பணியாற்றி வரும் பெண்களை நடத்துனர் பேருந்தில் ஏறக்கூடாது எனக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் கூலிக்கு வேலை செய்யும் பெண்கள் நடத்துனர் பேச்சால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பெண்கள் பேருந்தை மறித்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை நிலவி வருவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





