இடைத்தேர்தல் அதிமுகவுக்கு மரண தோல்வியாக இருக்கும் : மா.சுப்பிரமணியன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுகவுக்கு மரண தோல்வியாக இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக அமைச்சர்கள் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி நேற்று காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுகவுக்கு மரண தோல்வியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சர்கள் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





