--- --:--:-- --

மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவர்..!

3

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் உடல்நிலை சரியில்லாத தனது மனைவியை ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.

 

ஆனால் சிகிச்சையை தொடர முடியாது என மருத்தவர்கள் கூறிய நிலையில் மனைவியை ஆட்டோ ரிக்ஷாவில் வைத்து சொந்த ஊரான சுரடாவிற்கு அழைத்து சென்று உள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சடலத்தை ஆட்டோவில் இருந்து இறக்க ஓட்டுனரை நிறுத்தியுள்ளார்.

 

ஆட்டோவில் இருந்து இறங்கியவர் தனது மனைவியை பல கிலோமீட்டர் தூரம் தோளிலேயே சுமந்தவாறு நடந்துள்ளார். இதனை கண்ட காவல் அதிகாரி ஒருவர் அவருக்கு ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுத்து வழி அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon