--- --:--:-- --

அதானி விவகாரத்தில் பிரதமர் மௌனம் காத்து வருவது ஏன்?

8

அதானி விவகாரத்தில் பதிலளிக்காமல் பிரதமர் மோடி மௌனசாமியாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

 

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் சொத்து மதிப்பு 2 அரை ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்துள்ளது.

 

அவர்களின் சொத்து மதிப்பு 13 மடங்கு உயர்ந்ததற்கு என்ன மாயாஜாலம் செய்தார் என தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அதானி விவகாரத்தில் மௌனம் காத்த பிரதமர் மோடி மவுனசாமியாராக உள்ளார் என்றும் அவர் விமர்சித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon