விக்டோரியா நியமனத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!

ல எதிர்ப்புகளை மீறி முன்னாள் பாஜக நிர்வாகி விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில் அவரது நியமனத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

 

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியான மகிளா மோட்சாவின் மாநில செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக கௌரி வெறுப்பு பரப்பரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

எனவே விக்டோரியா கவுரி மனுவை திரும்ப பெறக் கோரி மூத்த வழக்கறிஞர்கள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தனர். இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்க அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வருகிறது.